மன்னார் சின்னக்கரிசல் பகுதியில் நேற்றிரவு ரயிலில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

தலை மன்னாரிலிருந்து கொழும்புக்கு சென்ற ரயிலில் மோதுண்டே அவர் உயிரிழந்திருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சம்பவத்தில் மன்னார் புதுக்குடியிருப்பைச் சேர்ந்த 29 வயதுடைய மீனவரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.சடலம் மன்னார் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Facebook Comments