கிளிநொச்சி சுண்டிக்குளத்தில் நூறு கிலோ கேரள கஞ்சா மீட்பு

கிளிநொச்சி சுண்டிக்குளம் கடற்கரை பகுதியில் இன்று 07-11-2016 சுமாா் நூறு கிலோ வரையான கேரள   கைப்பற்றப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ஆறு மணியளவில்  சுண்டிக்குளம் கடல் மார்க்கமாக கஞ்சா  கொண்டுவரப்படுவதாக தா்மபுரம்  பொலீஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சி முல்லைத்தீவு  பிராந்திய பிரதி பொலீஸ்மா அதிபா் மகேஸ் வெலிகண்ணவின்  வழிகாட்டலில் தர்மபுரம் பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி டிஎம் சத்துருங்க தலைமையிலான விசேட பொலீஸ் குழு நடவடிக்கையில் ஈடுப்பட்டு  72  கிலோ  கேரள கஞ்சாவை கைப்பற்றியுள்ளனா்
.kilinochchi-kg3 kilinochchi-kg4 kilinochchi-kg5 kilinochchi-kg6 kilinochchi-kg7 kilinochchi-kg8 kilinochchi-kg1 kilinochchi-kg2
இன்று அதிகாலை சுண்டிக்குளம் கடற்கரை பகுதிக்கு  பொலீஸ் குழுவினரை  அவதானித்த கடத்தல்காரர்கள் படகில் கஞ்சாவை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனா். இதேவேளை இரண்டு நபா்கள் உந்துருளியில் சுமாா் முப்பது கிலோ வரையான கஞ்சா பொதியை எடுத்துக்கொண்டு தப்பிச்செல்ல முற்பட்ட போது கடற்படையினா் சுற்றி வளைத்த நிலையில் அவா்களும் கஞ்சா பொதியை  எறிந்து விட்டு தப்பிச் சென்றுவிட்டனா்.
இதன் போது மீட்கப்பட்ட 30  கிலோ வரையான கஞ்சாவும், கடற்படையினரால்  விசேட அதிரடிப்படையினரிடம் கையளிக்கப்பட்டுள்ளது  இதேவேளை  பொலீஸாரினால் மீட்கப்பட்ட 72  கிலோ கஞ்சாவுமாக சுமாா் 102 கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை தா்ரமபுரம் பொலீஸாா் மேற்கொண்டு வருகின்றனா். விரைவில் சந்தேகநபா்களும் கைது செய்யப்படுவா் எனவும் பொலீஸாா் தெரிவித்துள்ளனா்
Facebook Comments