அமைச்சர் மற்றும்  நப்சோ ( NFSO )  இணைப்பாளர் சந்திப்பு…
வட மாகாண கடற்றொழில் அபிவிருத்திக்கான இணை முகாமைத்துவச் செயற்பாடு ஒன்றை அங்குரார்ப்பணம் செய்துவைப்பது தொடர்பிலான சில விடையதானங்கள் தொடர்பான விசேட கலந்துரையாடல் 10-11-2016 வியாழன் மதியம்  மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் இடம்பெற்றது.
குறித்த விசேட சந்திப்பில் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் (நப்சோ)  வடகிழக்கு மாகாண இணைப்பாளர் ஏ.ஜேசுதாசன், மன்னார் மாவட்ட இணைப்பாளர் ஏ.பெனடிக்ட் குரூஸ் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக வடக்கில் நிலவுகின்ற மீனவர் பிரச்சினைகளான இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகைகள், தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் மற்றும் தென்பகுதி மீனவர்களின் அத்துமீறிய வருகைகள் தொடர்பாகவும், குறித்த இணைமுகாமைத்துவ அங்குரார்ப்பணம் தொடர்பாகவும் கருத்துப்பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக அறியக்கிடைக்கின்றது.
Facebook Comments