கிளிநொச்சியில்  சிறப்பு  பொலிஸ் உத்தியோகத்தராக  தர்மபுரம் பொலிஸ் நிலையைப்  பொறுப்பதிகாரி தெரிவு

கிளிநொச்சிப்  பொலிசாரின்  கடமைக்கான  ஊக்குவிப்புப் பரிசு வழங்கும்  நிகழ்வு இன்று  கிளிநொச்சி  கூட்டுறவாளர்  மண்டபத்தில்  நடைபெற்றது

இன்று காலை  ஒன்பது  மணியளவில் ஆரம்பமாகிய  இன்  நிகழ்வில்  கிளிநொச்சி  பொலிஸ்  பிரிவுக்குட்ப்பட்ட  மிகவும்  சிறப்பாக செயற்ப்பட்ட  மற்றும்  சட்டவிரோத  செயற்பாடுகளை  தடுத்தமை தொடர்பாக  பொலிஸ்  நிலையங்களில் பதியப்பட்ட  வழக்குப்   பதிவுகளின்  அடிப்படையில்    50  பொலிஸ்  உத்தியோகத்தர்கர்களுக்கு  இன்று  ஊக்குவிப்புப் பரிசில்களாக  பணப்பரிசில்கள்  வழங்கப்பட்டுள்ளன
kilinochchi-police-7 kilinochchi-police-8 kilinochchi-police-11 kilinochchi-police-1
kilinochchi-police-2 kilinochchi-police-3 kilinochchi-police-4 kilinochchi-police-5 kilinochchi-police-6
  தெரிவு செய்யப்பட்ட  பொலிஸ்  உத்தியோகத்தர்களில்  மிகவும் சிறப்பாக செயற்பட்டு  முதல்நிலையில்  உள்ள  தர்மபுரம்  பொலிஸ்  நிலையைப்  பொறுப்பதிகாரி  டி .எம்  சத்துரங்க அவர்களுக்கு  அறுபதாயிரம் ரூபாய்க்கு  மேலான  பணத்தொகை பரிசில்களாக  வழங்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி  முல்லைத்தீவிர்கான  பிரதிப் பொலிஸ்மா அதிபர்  மகேஷ் வெலிகன்ன தெரிவித்தார்

இன்  நிகழ்வில்  கிளிநொச்சி  முல்லைத்தீவிர்கான  பிரதிப் பொலிஸ்மா அதிபர்  மகேஷ் வெலிகன்ன, சிரேட்ச பொலிஸ் அத்தியட்சகர்  பாலித்த சிறி ஆர்  சிறிவர்த்தன,  உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் றோசான் ராஜபக்ச ,  தலைமைப் பொலிஸ்  அதிகாரி  ஜெசாந்த டி சில்வா, கரைச்சிப் பிரதேச செயலாளர்  நாகேஸ்வரன் , பொலிஸ்  உத்தியோகத்தர்கள்  எனப் பலரும் கலந்து கொண்டனர்
Facebook Comments