கிளிநொச்சியில் கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்த பொலிஸ் அதிகாரிகளை பாராட்டும் நிகழ்வொன்று, இன்று (வியாழக்கிழமை) கிளிநொச்சி கூட்டுறவு சபை மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபர் மகேஸ் வெலிகன்ன தலைமையில், இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பாலித ஆர். சிறிவர்தன சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ச, கரைச்சி பிரதேச செயலாளர் கோ.நாகேஸ்வரன், உள்ளிட்ட பொலிஸ் உயரதிகாரிகள் என பலரும் கலந்துக்கொண்டனர்.

இதன்போது, கடந்த காலங்களில் இடம்பெற்ற, மது உற்பத்திகள், போதைப்பொருள் கடத்தல்கள், மரக்கடத்தல், சட்டவிரோத மண் அகழ்வு மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியமை உள்ளிட்ட பல குற்ற செயல்களை கட்டுப்படுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர்.

 

Facebook Comments