மாணவர்களின்  காலணிகளை  தீவைத்து  எரித்தார்  வகுப்பாசிரியர் :கிளிநொச்சியில் சம்பவம் 

 
கிளிநொச்சி  விஸ்வமடு  பின்தங்கிய  கிராமப்பகுதியில்  அமைந்துள்ள  பிரபல  பாடசாலை  ஒன்றில்  கடந்த  இரண்டாம்  திகதி புதன் கிழமை  பாடசாலைக்கு  சப்பாத்து  அணியாது  செருப்பு மற்றும் சாண்டில்  என்பவற்றை  அணிந்து வந்த  குறித்த  பாடசாலையின் தரம்  பதினொன்றில்  கல்விகற்கும்  சுமார் இருபதிற்கும்  மேற்ப்பட்ட  மாணவர்களது  காலணிகளே  அவ்வாறு  குறித்த  வகுப்பு  ஆசிரியர்  அவர்களினால்  பெரிய  பை ஒன்றினுள்  இட்டு   பாடசாலையின்  பிரதான  கட்டிடத்திற்குப்  பின்னால்  வைத்து  தீமூட்டப்பட்டுள்ளதாக   உறுதிப் படுத்தப்பட்ட  தகவல்கள்  தெரிவிக்கின்றன 
 
 
 
இந்தச் செயற்பாடுஎமக்கு  பெரும்  கவலையை  ஏற்ப்படுத்தி  உள்ளதாகவும்  நாம்  அன்றாடம்  கூலித்தொழில்  செய்தும்  கடற்தொழில் செய்துமே  எமது  பிள்ளைகளை  பாடசாலைக்கு அனுப்புகின்றோம்  எமது  மாணவர்கள்  சப்பாத்து  அணியாமல்  வந்ததனை  நாம் சரி என்று வாதிடவில்லை  சம்பவம்  நடைபெற்ற  காலப்பகுதியில்  எமது கிராமங்கள் எல்லாம்  மழை  பெய்திருதது  நாங்கள்  நகரத்தில் இல்லை  எத்தனையோ ஆறுகளையும்  வாய்க்கால்களையும்  தாண்டித்தான்  எமது பிள்ளைகள் பாடசாலைக்கு வருகின்றார்கள்  இதனாலே அன்று  எமது  பிள்ளைகள்  செருப்புடன்  வந்தார்கள்  அது  பாடசாலையின்  விதிமுறைகளுக்கு பிழையான ஒன்றுதான்  ஆனாலும்  குறித்த  வகுப்பாசிரியர்  தன்னிச்சையாக  முடிவெடுத்து  எமது பிள்ளைகள் அழுதுகொண்டிருந்த  போதும்  தூரத்தில் நின்று பார்க்காதீர்கள்  பக்கத்தில் நின்று பாருங்கள் என்று கேலியாகக்  கூறியவாறு செருப்பு  முழுவதனையும்  எரித்துள்ளார்  இவர்  இப் பிழைக்கு வேறு தண்டனைகள்  வழங்கினால்  கூட  பறவாயில்லை  வறுமைப்பட்ட  எங்களுக்கு இவ்வாறு செய்துள்ளார் என அவர்களது  பெற்றோர்கள்  தெரிவிக்கின்றனர்
 
 
இருப்பினும்  குறித்த சம்பவம் ஒன்று  அவ்வாறு நடைபெறவில்லை என  குறித்த ஆசிரியர்  சம்பவத்தினை மறைக்க காலணிகள் பெறப்பட்டு  அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது  அதனை மீள அவர்களுக்கு வழங்க உள்ளேன்  என  பல பொய்யான காரணங்களை சொல்லி இருக்கின்றார் இருப்பினும்  சம்பவம் நடைபெற்று  ஒரு வாரத்தினை  கடந்த  போதும்  காலணிகள் மீளவும்  கையளிக்கப் படவில்லை  என்பது  குறிப்பிடத்தக்கது 
Facebook Comments