பாரதிபுரம் பாடசாலை மாணவா்களுக்கு சப்பாத்துகளும்,புத்தக பைகளும் வழங்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி பாரதிபுரம் பாடசலையில் கடந்த மாதம் பதினை்நதாம் திகதி பாடசாலைக்கு சப்பாத்து அணிந்த வராத மாணவா்களின்  செருப்புக்கள் ,சண்ரிஸ்கள் கழற்றப்பட்டு வீதியில் குவித்த சம்பவம் பல்வேறு தரப்புக்கள் மத்தியில் பெரும் விசனத்தை ஏற்படுத்திய நிலையில்
 குறித்த செய்தியினை   பார்வையிட்ட சுவிஸ் நலம் காப்போம் அமைப்பினா் முன் வந்து குறித்த பாடசாலையில் சப்பாத்து வாங்க முடியாத மாணவா்களின் பெயா் விபரங்களை வலயக் கல்வித்திணைக்களம் ஊடாக பாடசாலை அதிபரிடம் பெற்று அவா்ளுக்கு இன்று 11-11-2016 வெள்ளிக்கிழமை சப்பாத்துக்கள் மற்றும் புத்தகப் பைகளையும் வழங்கி வைத்த்துள்ளனா்
.14718758_933533470085046_7806719002924605566_n img_8723 img_8727 img_8732 img_8740 img_8752 img_8756 img_8778 img_8785 img_8790 img_8793 img_8798 img_8807 14691086_933533476751712_7474607931128812737_n
பாடசாலை அதிபரினால் தெரிவு செய்யப்பட்ட 117 மாணவா்களுக்கும் சப்பாத்து மற்றும் புத்தகப் பை என்பவற்றோடு, குறித்த சம்பவத்தில் விதியில் குவிக்கப்பட்ட காலணிகளுக்குரிய பதினைந்து மாணவா்களுக்கும் மேலதிகமாக கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
பாடசாலை அதிபா் கணேஸ்வரநாதன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கிளிநொச்சி வலயக் கல்வித்திணைக்களத்தின் முறைசார கல்விப்  பிரிவின் உதவிக் கல்விப் பணிப்பாளா் த.பேரின்பராசா,  பிறேம்  நற்பணிமன்றத்தின்  தாபகா் கெங்கேஸ்வரன், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின்  செயலாளா் பூபாலன், கிராம அபிவிருத்திச் சங்க செயலாளா் தங்கராசா மற்றும் ஆசிரியா்கள் பெற்றோா்கள் என பலா் கலந்துகொண்டனா்
Facebook Comments