கிளிநொச்சியில் அபிவிருத்தி என்ற பெயரில் அழிக்கப்படும் இயற்கை வளங்கள்

கிளிநொச்சி மாவட்டத்தில்  அரச  மற்றும் அரச சார்பற்ற  நிறுவனங்களினால்  பல அபிவிருத்திப்  பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றநிலையில் கிளிநொச்சி கோவிந்தன் கடைச் சந்தியில் இருந்து திருவையாறு ஊடாக  இரணைமடு  குளம் வரை நடைபெறுகின்ற   வீதி புனரமைப்புப் பணிகளில்  கிளிநொச்சியின்  இயற்கை வளமான  மரங்கள் அழிக்கப்படுவதாக அப்பகுதி கிராம மக்கள்  குற்றம் சுமத்துகின்றனர்
குறித்த சம்பவம் தொடர்பாக  அவர்களிடம் எமது செய்திச் சேவை வினவியபோது
rodad3 rodad4 rodad5 rodad1 rodad2
கடந்த இரண்டு மாதகாலமாக  நடைபெற்று வருகின்ற இவ்  வீதி அபிவிருத்திப் பணியில் வீதியின் அருகில் இருக்கின்ற பனைமரங்கள்  ஒருநாளைக்கு சுமார் ஐந்து ஆறு மரங்கள் ஜெசிபியினால்  பிடுங்கப்பட்டு இரணைமடு  வாய்க்களிற்கும்  புனரமைக்கப்படுகிற  பாதைக்கும் நடுவே குழி தோண்டப்பட்டு புதைக்கப்படுவதாக தெரிவித்தனர்
 அத்துடன்  கிளிநொச்சியில் சட்டவிரோத  மரங்கள் கடத்தப்பட்டு ஒரு பக்கம் இயற்கை அழிந்து வருகின்ற நிலையில் இவ்வாறு அபிவிருத்தி என்ற பெயரிலும் மரங்கள்அழிக்கப்பட்டு வருகின்றது  இவ் மர அழிப்பும்  கிளிநொச்சியில் இன்னமும்  மாரிமழை  பெய்யமைக்கு காரணமாக இருக்கலாம் என தெரிவித்தனர் மேலும்   இதனை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் கருத்திற்  கொண்டு நிறுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்
Facebook Comments