கிளிநொச்சியில் 450 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு

 புலம்பெயர் உறவுகளின் நிதி உதவியில் இரண்டாயிரத்து ஒன்பதாம்  ஆண்டு  முதல் பல்வேறு உதவிகளை ஆற்றிவருகின்ற  கிராமிய  கல்வி அபிவிருத்தி நிறுவனம்  கிளிநொச்சி மாவட்டத்தில்  தெரிவு செய்யப்பட்ட  450 பாடசாலை மாணவர்களுக்கு  புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள்  என்பவற்றை
இன்று  கிளிநொச்சியில் வழங்கி உள்ளது
 students5 students6 students7 students2 students3 students4
இன்று காலை ஒன்பது மணியளவில் கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில்  நடைபெற்ற இன் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு  குறித்த  பாடசாலை உபகரணங்களை  வழங்கி வைத்தார்
குறித்த  நிறுவனமானது  வடக்குக் கிழக்கில் தனது சேவைகளை முன்னெடுத்து வருவதுடன் கிளிநொச்சியில் தெரிவு செய்யப்பட்ட  குறித்த 450 மாணவர்களுக்கும்  கல்வி ஊக்குவிப்பு நிதியாக தலா 500  ரூபாவினை வழங்கி வருவதுடன்  மூன்று மாதத்திற்கான  ஊக்குவிப்புத் தொகையை ஒன்றுதிரட்டியே  இன்று குறித்த மாணவர்களுக்கு இன்று பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
இன் நிகழ்வில்  கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சத்தியசீலன்,கிராமிய  கல்வி அபிவிருத்தி நிறுவன பிரதி நிதிகள்  மாணவர்கள் ,நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Facebook Comments