அமெரிக்காவில் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஒருவர் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் நாட்டின் தலைநகரமான சென்னையில் ஷியாமளா கோபாலன் ஹரிஸ் மற்றும் ஜமைக்கா-அமெரிக்கா குடியுரிமை பெற்ற டொனால்ட் ஹரிஸ் என்ற தம்பதி கடந்த 1960ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் குடியேறினர்.

இத்தம்பதிக்கு 1964-ம் ஆண்டு கமலா தேவி ஹரிஸ் என்ற பெண் குழந்தை பிறந்துள்ளது. கலிபோர்னியா நகரில் பிறந்ததால் இவர் அமெரிக்க குடிமகள் ஆனார்.

கல்வியில் சிறந்து விளங்கிய கமலா படிப்படியாக அரசியலில் நுழைந்து தற்போது ஜனநாயக கட்சில் ஒரு முக்கிய பெண் அரசியல்வாதியாக திகழ்கிறார்.

இதுமட்டுமில்லாமல், 2004 முதல் 2011 வரை சான் பிரான்சிஸ்கோ மாகாண அட்டர்னி ஜென்ரலாகவும், 2011 முதல் கலிபோர்னியா மாகாண அட்டர்னி ஜென்ரலாகும் பதவி வகித்துள்ளார்.

தற்போது நடந்து முடிந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கலிபோர்னிய மாகாண செனட்டர் பதவிக்கு போட்டியிட்டு அபாரமாக வெற்றி பெற்றுள்ளார்.

முன்னதாக, கமலாவின் திறமைகளை பார்த்த கட்சி மேலிடம் அவருக்கு கலிபோர்னியா ஆளுநர் பதவி, உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி அல்லது துணை ஜனாதிபதி பதவி வழங்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஆனால், செனட்டர் தேர்தலில் தற்போது கமலா வெற்றி பெற்றுள்ளார்.

அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஹிலாரி கிளிண்டன் பெண் ஜனாதிபதியாக பதவி ஏற்பார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிஷ்டவசமாக அவர் தோல்வியை சந்தித்தார்.

இந்நிலையில், கமலா ஹரிஸின் திறமைகளையும் அரசியல் நுணுக்கங்களையும் கண்ட வல்லுநர்கள் எதிர்வரும் 2020-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் கமலா போட்டியிட வாய்ப்புள்ளதாகவும், அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக பெண் ஜனாதிபதியாக அவர் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

Facebook Comments