இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஹிட் அவுட் விக்கெட் ஆகி புதிய பல மோசமான சாதனை பட்டியலில் இணைந்துள்ளார்.

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணித்தலைவர் கோஹ்லி 40 ஓட்டங்கள் எடுத்திருந்த போது ஹிட் அவுட் விக்கெட் ஆனார்.

இதன் மூலம் விராட் டெஸ்ட் போட்டியில ஹிட் அவுட் விக்கெட் ஆன 22வது இந்திய துடுப்பாட்டகாரராக இடம் பிடித்துள்ளார்.

மேலும், லக்ஷ்மண் பிறகு 14 ஆண்டுகளில் முதன் முறையாக ஹிட் அவுட் விக்கெட் ஆகியுள்ள இந்திய வீரராக விராட் திகழ்கிறார்.

ஹிட் அவுட் மூலம் அவுட்டாகிய 2வது இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி. இதற்கு முன் 1949ம் ஆண்டு லாலா அமர்நாத் 13 ஓட்டங்களில் மேற்கிந்திய தீவு அணிக்கெதிராக ஹிட் அவுட் ஆகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments