பிரித்தானியாவில் பெக்கி வாட்ஸ் என்ற சிறுமியை கொன்றவர்களில் ஒருவர் சிறையில் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Surrey’s Bronzefield சிறையில் அடைக்கபட்டிருக்கும் பெக்கி வாட்ஸ் கொலை குற்றவாளிகளில் ஒருவரான Shauna Hoare என்ற பெண்ணே சக கைதிகளால் மோசமாக தாக்கப்பட்டுள்ளார்.

மிகவும் மோசமாக தாக்கப்பட்டுள்ள Shauna Hoareவுக்கு புத்துயிரளிப்பதற்காக இரண்டு முறை சிகிச்சை அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

கடந்த 2015ம் ஆண்டு Bristol பகுதியில் உள்ள வீடு ஒன்றில் காணாமல் போன 16 வயது சிறுமி பெக்கி வாட்ஸை கொன்றவர்களில் Shauna Hoareவும் ஒருவர் என அடையாளம் காணப்பட்டார்.

பின்னர், குறித்த குற்றத்திற்காக Shauna Hoareவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இதே சமயம், முக்கிய குற்றவாளியான 28 வயதான Shauna Hoareவின் காதலன் Nathan Matthewsக்கு குறைந்தபாட்சம் 33 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

Nathan Matthews தனது சகோதரியான பெக்கி வாட்ஸை கொன்று துண்டு துண்டாக வெட்டி தோட்டத்தில் வீசியுள்ளார். இதற்கு, Shauna Hoareவும் உடைந்தையாக இருந்துள்ளார் என நிரூபிக்கபட்டுள்ளது.

இதனையடுத்து இருவரும் விதிக்கப்பட்ட தண்டனையை Surrey’s Bronzefield சிறையில் அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறையில் சக கைதிகளால் Shauna Hoare கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார்.

Facebook Comments