இந்தியாவில் செல்லாத 1000 ரூபாயினால் 8 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள மகுவா மாஃபி என்ற கிராமத்திலே இச்சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.

சம்பவத்தின் போது உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 8 வயது மகளை தந்தை பைக்கில் வைத்து மருத்துவமனைக்கு விரைந்துள்ளார்.

இதன்போது, பாதி வழியில் பைக்கில் பெட்ரோல் இல்லாததால் பெட்ரோல் பங்கிற்கு சென்றுள்ளார்.

அப்போது தந்தையிடம் 1000 ரூபாய் நோட்டு மட்டுமே இருந்துள்ளது. இந்த நிலையில், 500, 1000 ரூபாய் செல்லாது என்ற அறிவிப்பினால் பங்க் ஊழியர்கள் சில்லறை கேட்டுள்ளனர்.

தந்தை தனது நிலைமையை கூற பெட்ரோல் தாமதமாக வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, சிறுமியை எடுத்துக்கொண்டு தந்தை மருத்துவமனை விரைந்துள்ளார்.

மருத்துவமனையில் சிறுமியை சோதித்த மருத்துவர்கள் சிறுமி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர்.

மேலும், முன்கூட்டியெ வந்திருந்தால் குழந்தையை காப்பாற்றியிருக்கலாம் என தெரிவித்துள்ளனர்.

Facebook Comments