மகாதேவா  சிறுவர் இல்ல  மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் வழங்கி வைப்பு


   கிளிநொச்சி    மகாதேவா  சிறுவர் இல்ல     450   மாணவர்களுக்கு  புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள்  என்பவற்றை e fly travel  நிறுவனத்தின்  நிதி அனுசரணையில் கிராமிய  கல்வி அபிவிருத்தி நிறுவனம்
இன்று   வழங்கி உள்ளது
 
இன்று பிற்ப்பகல் ஒரு  மணியளவில் கிளிநொச்சி  மகாதேவா  சிறுவர் இல்ல பொது    மண்டபத்தில்  நடைபெற்ற இன் நிகழ்வில் கிளிநொச்சி இந்துக்கல்லூரி  அதிபர் கி .விக்கினராஜா  பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு  குறித்த சிறுவர் இல்ல  மாணவர்களுக்கு  பாடசாலை உபகரணங்களை  வழங்கி வைத்தார் 
 makaathevaa-2 makaathevaa-1 makaathevaa-12 makaathevaa-11 makaathevaa-10 makaathevaa-9 makaathevaa-8 makaathevaa-7 makaathevaa-6 makaathevaa-5 makaathevaa-4 makaathevaa-3
 
இன் நிகழ்வில்   கிளிநொச்சி இந்துக்கல்லூரி  அதிபர் கி .விக்கினராஜா,கிராமிய  கல்வி அபிவிருத்தி நிறுவன பிரதி நிதிகள்,மகாதேவா  சிறுவர் இல்ல பிரதி நிதிகள்  மாணவர்கள் ,நலன்விரும்பிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர் 
 
இதனைத் தொடர்ந்து  கிளிநொச்சியில்  உள்ள  ஆரோபணம்   இளைஞர்  இல்ல  மாணாவர்கள் நாற்ப்பது பேருக்கும்  கிளிநொச்சி காந்தி சிறுவர் நிலைய மாணவர்கள்  இருபத்தைந்து பேருக்கும் 
e fly travel  நிறுவனத்தின்  நிதி அனுசரணையிலையே  கிராமிய  கல்வி அபிவிருத்தி நிறுவன பிரதி நிதிகளால்  குறித்த புத்தகப்பை மற்றும் பயிற்சிப் புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது
Facebook Comments