வவுனியா, பட்டக்காடு பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் 6 அடி நீளமான பாம்பு ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

மேலும் சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

பாம்பினை விரட்டுவதற்கு வீட்டில் உள்ளவர்கள் முயன்ற போதும், பாம்பு வெளியேறாது வீட்டு சுவரிடையில் இருந்த இடைவெளியொன்றில் புகுந்து அகப்பட்டுக் கொண்டது.

இதனையடுத்து அப்பகுதி மக்கள் அனைவரும் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர்.

பின்பு, பொலிசார் வருகை தந்ததுடன் பாம்பு பிடிக்க தெரிந்தவர்களை வரவழைத்து அந்த பாம்பை பிடித்தனர்.

இதன்போது குறித்த வீட்டில் வசிக்கும் குடும்பப் பெண் மயக்கமடைந்து விழுந்து, இது கோவில் பாம்பு, அடிக்க வேண்டாம் கேட்டதையடுத்து குறித்த பாம்பு பிடிக்கப்பட்டு, ஆலயம் ஒன்றில் விடப்பட்டது.

Facebook Comments