கிளிநொச்சியில் ஏழு அடி உயரமான கஞ்சா செடி மீட்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் முதன் முறையாக ஏழு அடி உயரமான கஞ்சா செடி மீட்கப்பட்டுள்ளது.
மலையாளபுரம் பகுதியில் சட்டவிரோத செயற்பாடுகள் காணப்படுவது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து மேற்கொண்ட விசேட தேடுதலின்போது குறித்த கஞ்சா செடியும், 25 லீட்டர் கசிப்பும் மீட்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதி பொலிஸ்மா அதிபரின் கட்டளைக்கமைய தேடுதல் மேற்கொண்ட விசேட பொலிஸ் குழுவினரால் குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
இந்நிலையில், மேற்படி கஞ்சா செடி வளர்ப்பில் ஈடுபட்ட சந்தேக நபரை இன்று 15.11.2016 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். என்பது குறிப்பிடத்தக்கது
Facebook Comments