முழங்காவில் பகுதியில் குழுக்களுக்கிடையில் மோதல் வெட்டுக் காயங்களுடன் இருவர் வைத்தியசாலையில்

முழங்காவில் நாச்சிக்குடாப்பகுதி கடையொன்றில் இன்று மாலை  ஏற்ப்பட்ட  தகராறு காரணமாக இரண்டு குழுக்கள் மோதுண்டதில் ஒரு தமிழ் இளைஞன் மற்றும் ஒரு முஸ்லீம் இளைஞன்  வாள்வெட்டுக்கு இலக்காகி  முழங்காவில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இதனால் குறித்த பகுதி பதற்ற நிலையில் இருப்பதாகவும் குறித்த பகுதியில் மீண்டும்  மோதல் ஏற்ப்படாதவாறு  முழங்காவில் பொலிசார் காவற் கடமையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது
குறித்த சம்பவம் தொடர்பான  மேலதிக தகவல் எதனையும் பெற முடியவில்லை எனவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முழங்காவில் பொலிசார் மேற்கொண்டு வருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

Facebook Comments