இலங்கையில் திகிலூட்டும் வகையிலான பேய் மாளிகை ஒன்று இனங்காணப்பட்டுள்ளதாக கொழும்பு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

மிகவும் பிரம்மாண்டமான முறையில் 100 அறைகளை கொண்டதாக இந்த பேய் மாளிகை அமைந்துள்ளது. இலங்கையின் திக்கந்த வலவ்வ என்ற பிரதேசத்திலேயே குறித்த மாளிகை அமைந்துள்ளது.

யாருமற்ற மலைப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட தோட்ட காணிக்குள் இந்த பேய் மாளிகை அமைந்துள்ளது.

இந்த காணிக்குரிய சொந்தக்காரர் வெளிநாட்டில் வசிப்பதால், யாரும் கவனிப்பாரற்ற நிலையில் குறித்த மாளிகை காணப்படுகிறது.

குறித்த மாளிகை தற்போது பாழடைந்த நிலையில் காணப்படுகின்றது. இந்த மாளிகையை பார்வையிட யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் பேய்களுக்கு மிகவும் பிரபலமான இடமாக இந்தப் பகுதி கருதப்படுகிறது.

இது தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரப்பப்பட்டு வருகின்றன.

Facebook Comments