பெண்களின் மார்பகங்கள் வயது அதிகரிக்கும் போது, குழந்தை பெற்றுக் கொண்ட பிறகு தளர்வடைய ஆரம்பிக்கும்.

ஆனால் இன்றைய காலத்திலோ உடல் பருமன் அதிகமாக உள்ள பெண்களுக்கு மிக எளிதிலேயே தளர்வடைந்து விடுகிறது.

இதனால் அவர்கள் விரும்பிய ஆடையை அணிய முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கான சூப்பரான டிப்ஸ் இதோ,

  • பெண்கள் உட்காரும் போது, கூன் போட்டு குனிந்து உட்கார்ந்திருப்பதை முற்றிலும் தவிர்த்து, எப்போதும் நேரான நிலையில் இருக்க வேண்டும். இதனால் மார்பகங்கள் சிக்கென்று நேராக இருக்கும்.
  • மார்பகங்கள் தளர்வாக இருந்தால், தினமும் ஐஸ் கட்டிகளைக் கொண்டு 1 நிமிடம் மட்டும் வட்ட சுழற்சியில் முறையிம் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பகத்தின் அழகை அதிகரிக்கலாம்.
  • கற்றாழை ஜெல்லை எடுத்து தினமும் இரவு நேரத்தில், 15 நிமிடம் மேல் நோக்கி மார்பகங்களை மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் மார்புப் பகுதியில், ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, இணைப்புத் திசுக்களை வலிமையடையச் செய்கிறது.
  • ஆலிவ் ஆயிலில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. எனவே தினமும் ஆலிவ் ஆயிலை கொண்டு 15 நிமிடம் மேல் நோக்கி மார்பகத்தை மசாஜ் செய்து வர வேண்டும். இதனால் ஒரே வாரத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
  • வெள்ளரிக் காயை துருவி, அதனுடன் சிறிது வெண்ணெய், மில்க் க்ரீம் மற்றும் முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றைச் சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மார்பகங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்துக் கழுவ வேண்டும்.
  • முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் தனியாக எடுத்து, அதனை மார்பகங்களில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முட்டையில் உள்ள புரோட்டீன், மார்பக செல்களுக்கு ஊட்டமளித்து, மார்பகத்தை சிக்கென்று மாற்றுகிறது.
  • மார்பகங்கள் பெரிதாக இருக்கும் பெண்கள் புஷ்-அப், செஸ்ட் பிரஸ் போன்ற உடற்பயிற்சிகளை தினமும் காலையில் செய்து வந்தால், மார்பக திசுக்கள் இறுக்கமடைந்து, தொங்கும் மார்பகங்களை சிக்கென்று மாற்றுகிறது.
Facebook Comments