ஒரு ஊரில் மிகவும் அன்பான கணவன் மனைவி வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் இருவருமே ஒருவர் மீது ஒருவர் கொள்ளைப் பிரியம் வைத்திருந்தார்கள்.

இவர்கள் இருவரும் ஒரு நாளும் பிரியாமல் வாழ்ந்து வந்தார்கள்.

ஒரு நாள் அந்த மனைவியின் அம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தினால், அவளின் சொந்த ஊரில் இருக்கும் அம்மாவை பார்க்க சென்று விட்டாள்.

அவளின் கணவன் அலுவலகத்தில் வேலை பார்த்து விட்டு வீடு திரும்பும் போது, தன்னுடைய மனைவி அவளின் அம்மா வீட்டிற்கு சென்று விட்டாள் என்பது அவனுக்கு நினைவுக்கு வந்தது.

கவலையில் இருந்த கணவன் அன்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்குவதற்கு தன்னுடைய அறைக்குச் சென்றான்.

அவன் எப்போதுமே இரவு தூங்கும் போது, தன் மனைவியை கட்டி அணைத்து தன் இதழை மனைவியின் இதழில் ஒற்றி எடுத்து குட்நைட் சொல்வது நினைவுக்கு வந்தது.

எனவே தன்னுடைய மனைவி இல்லாத அந்த ராத்திரியில் அவனுக்கு தூக்கமே வரவில்லை.

அதனால் தொலைக்காட்சியை பார்த்தபடியே இருந்தான்.

அப்போதும் அவனுக்கு தூக்கம் வரவில்லை. உடனே அணைத்து விட்டு தூங்கலாம் என்று முடிவு செய்தான்.

அந்த நேரத்தில் திடீரென கடிகாரத்தில் 12 மணி பெல் அடிக்கிறது. தூரத்தில் இருந்து ஊளையிடுன் நாயின் சத்தம். மேலும் அதனுடன் நாதஸ்வரம் போன்ற இசையும் கேட்கச் செய்கிறது.

பக்கத்து தெருவில் ஏதோ விழா நடப்பதால், இரவு முழுவதும் அவன் தூங்கவே இல்லை.

மணி ஐந்து ஆகிவிட்டது. சிறிது நேரம் மட்டும் தூக்கத்தில் ஆழ்கிறான் அப்போது திடீரென போன் அடிக்கிறது விழித்து பார்த்து அந்த போனை எடுக்கிறான்.

அந்த போனில் அவனுடைய மனைவி மணி ஏழு ஆகிறது இன்னும் என்ன தூக்கம் ஆப்பிஸ் போகுற ஐடியா இல்லையா? நான் இல்லை என்றதும் இவ்வளவு நேரம் உறக்கமா என்று திட்டிவிட்டு வைத்தாள்.

பொதுவாக எந்த மனைவியும் உண்மையாக என்ன நடந்தது என்று சொன்னாள். நம்பவா போகிறார்கள்.

இக்கதையின் மூலம் ஒரு நாள் ராத்திரியில் தங்களின் அன்பான மனைவி இல்லை என்றால் கணவன் தூக்கம் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலைகள் தான் அனைவருக்கும் ஏற்படும்

Facebook Comments