கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த யாழ்தேவியின் சாரதி, ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு  இறங்கிச் சென்றுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ரயில்வே சாரதிகளின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக வடக்கு ரயில் சேவைகள் அநுராதபுரம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தற்போதே செய்திகள் வெளியாகியுள்ளன.
இதன் காரணமாகவே  ரயில் சாரதி ரயிலை அநுராதபுர ரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பயணிகளிடம் யாழ்ப்பாணம் வரை செல்வதற்கான கட்டணம் அறிவிடப்பட்டு திடீரென ரயிலை இடைநடுவில் நிறுத்தியுள்ளதால் பயணிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதோடு அநுராதபுர ரயில் நிலையத்தில் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக குறித்த ரயிலில் பயணித்து பாதிக்கப்பட்ட பயணி ஒருவர் தெரிவித்தார்
Facebook Comments