வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர் யுவதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் ‘கை கொடுக்கும் நண்பர்கள்’ எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மன அழுத்தம் காரணமாக தற்கொலை முடிவு எடுப்பவர்களை காப்பாற்றும் நோக்கத்துடன் ஆரம்பி க்கப்பட்டிருக்கும் இவ் அமைப்பானது மன அழுத்தத்தில் உள்ளவர்கள் தனிமையில் பிழையான முடிவுகளை எடுக்காமலிருப்பதற்காக 024-324 4444 என்கிற தொலைபேசி இலக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளது.
அரசியல்,மதசார்பு அற்ற அமைப்பாக இயங்கும் இவ்வமைப்பானது பல பொது அமைப்புக்களை இணை த்து செயற்பட்டு வருகிறது.
அத்துடன் வவுனியாவில் தொண்டராக சேர்ந்து சேவையாற்ற விரும்புகிறவர்களையும் உள்வாங்க காத்தி ருக்கிறது.
தொண்டர்களுக்கான இலவச பயிற்சி வகுப்புக்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 20.11.2016 காலை 9.00 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணிவரை நடைபெறவுள்ளதால் தொண்டராக சேர விரும்புவோர் 18.11.2016 வெள்ளிக்கிழமை பிற்பகல்3.00மணிக்கு முன் 0774409313 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் எனவும் அவ் அமைப்பு தெரிவித்துள்ளது.
Facebook Comments