இந்தச் சம்பவத்தில் பாலாவி தெற்கைச் சேர்ந்த அழகரத்தினம் நித்தியமலர் (வயது-23) என்ற யுவதியும்,கெற்பேலியைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின் தந்தையான செல்லையா தெய்வேந்திரன் (வயது -45 )என்பவரையும் ஆபத்தான நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது குறித்த யுவதி உயிரிழந்துள்ளார்.

மேலும் இச் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,

இவர்கள் இருவரும் கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமற் போயிருந்த நிலையில் கச்சாய்ப் பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றில் இவர்களைக் கண்ட பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து குறித்த ஆலயத்துக்கு பொலிஸார் சென்ற வேளை அவர்கள் நஞ்சருந்திய நிலையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதனையடுத்து இவர்களை மீட்ட பொலிஸார் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த போது யுவதி உயிரிழந்துள்ளதுடன் குடும்பஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

Facebook Comments