மழையினால் இரணைமடுக் குளத்தின் புனரமைப்புப் பணிகளில் மாற்றம்

கிளிநொச்சியில் பெய்துவருகின்ற மழைகாரணமாக  இரணமடுக்  குளத்தின் புனரமைப்புப் பணிகளில் சிறிய மாற்றத்தினை ஏற்ப்படுத்தி இருப்பதாக கிளிநொச்சி மாவட்ட  பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர்  தெரிவித்துள்ளார் untitled-2
இன்றையதினம் நீண்ட இடைவெளிக்குப் பின்னர்   கிளிநொச்சியில் அதிகளவான  மழைவீழ்ச்சி பதிவாகியதனை அடுத்து இரணைமடுக்குளத்தின் புனரமைப்புப் பணிகள் தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட  பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளர் அவர்களை வினவியபோதே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்
அவர் மேலும் தெரிவிக்கையில் மழை என்பதனைக் காரணம் காட்டி  இரணைமடுக்குளத்தின்  புனரமைப்பு வேலைகளை  பிற்போட முடியாது இதுதான்  இங்குள்ள பெருமளவான மக்களின் வாழ்வாதாரத்தினைக்  கொண்டுசெல்ல உதவுகின்றது என்பதனை  அறிந்தவர்கள் நாங்கள் மழைகாலம்  மழைவரும்  என்பதனால்  நாம் குளத்தின் வெளிப்பாதை, பாலம்  என்பவற்றின் பணிக்கு  முக்கியத்துவம்  வழங்காது குளத்தின் உட்கட்டுமானப்பணிகளை  முடிப்பதில் ஆர்வம் காட்டி இருந்தோம் இன்று  நீங்கள் கூறியது போல் கிளிநொச்சியில் அதிகளவான மழை வீட்சி  பதிவாகியுள்ளது அதனால்  எமது கட்டுமானப் பணிகளில் குளத்தின் உட்கட்டுமானப் பணிகளின்  வேலைகளைக் குறைத்து  பாலவேலை மாறும்  குளத்தின் பாதை வேலைகளில் ஆர்வம் காட்டியுள்ளோம்  எவ்வாறாயினும் மழை என்றாலும் கூட நாம் எமது பணிகளைத் திட்டமிட்டு  வழமைபோல் செய்துகொண்டுள்ளோம்  எனத் தெரிவித்தார் ui-2
அத்துடன்  இன்றைய தினம் கிளிநொச்சியில் பெய்த மழையின்  பதிவுகளாக  இரனைமடுக்குளத்தினை  அண்டியபகுதியில் 120.8 MM மழையும் அக்கராயன் குளத்தினை   அண்டியபகுதியில் 139.3 MM மழையும் கரியாலை நாகபடுவான் குளத்தினை  அண்டியபகுதியில் 131.7 MM மழையும் பதிவாகியுள்ளது  இதனால்  குறித்த குளங்களின்    நீர்மட்டங்களின் அளவுகள் சிறியளவு  உயர்வடைந்துள்ளது குறித்த குளங்களின் நீர்மட்டங்களின்  வாசிப்புக்கள் இரணைமடுக்குளம் 2.9  அடி,  அக்கராயன் குளம் 15.6 அடி,கரியாலை நாகபடுவான் குளம் 3.5 அடி எனவும்  உறுதிப்படுத்தப்பட்ட புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன
Facebook Comments