முகமாலையில் பிக்கப் ஒன்று தடம்புரண்டதில் இருவர் வைத்தியசாலையில்

இன்று  19.11.2016 காலை 09.00 மணிக்கு முகமாலை A9 வீதியில் கலோரஸ் கண்ணிவெடி அகற்றும் பிரிவு அலுவலகத்துக்கு முன்னால் வேக கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் வாகனம்  தடம்புரண்டதில்  சாரதி உட்பட இருவர் காயம் அடைந்த நிலையில்  பளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிய வருகின்றதுmukamaalai-5

 
குறித்த விபத்து மழைகாரணமாக வாகனத்தினை  தடுப்பினால்  கட்டுப்பாட்டிற்குக்  கொண்டுவர முற்ப்பட்ட வேளை  தடம்புரண்டிருக்கலாம் என பளைப் பொலிசார் சந்தேகிக்கின்றனர்  அத்துடன் விபத்து    தொடர்பான மேலதிக விசாரணைகளையும்   பளைப் பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது
 

  mukamaalai-1 mukamaalai-2 mukamaalai-3 mukamaalai-4
Facebook Comments