இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான ஒருநாள்  போட்டி ஆரம்பம்பமாகியுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

இதேவேளை ஏற்கனவே இடம்பெற்ற போட்டிகளின் புள்ளிகள் அடிப்படையில் மேற்கிந்திய தீவுகள் அணி 7 புள்ளிகளுடன் முதலாவது இடத்தையும், இலங்கை அணி 5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் சிம்பாப்வே அணி 2 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளது.

எவ்வாறாயினும் புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களில் இருக்கும் அணிகளே இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments