சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று நடைபெற்ற 2.0 படத்தின் First look Launch நிகழ்ச்சிக்காக நேற்றே சென்னை விமான நிலையத்தில் இருந்து மும்பை சென்றார்.

அங்கு அவருக்கு ரசிகர்கள் நிறைய பேர் வாழ்த்துக்கள் கூறினர். இன்று எமி ஜாக்சன், சல்மான் கான், அக்ஷய் குமார் என பலர் பங்கேற்க மும்பையில் விழா சிறப்பாக நடந்து முடிந்தது.

இதில் மேடையில் பேசிய ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர் உடன் பணியாற்றுவது கடினமாக இருந்தது.

அவர் வேலைகளை கச்சிதமாக செய்ய கூடியவர். இந்த படத்தில் ஹீரோ நான் அல்ல. அக்ஷய் குமார் தான் என கூறினார்.

பலருக்கும் இது வியப்பாக இருந்தது. சிலருக்கு அதிர்ச்சியாக இருந்தது.

Facebook Comments