கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதனால் போக்குவரத்துக்கள் பாதிக்கும் அபாயம்

 kanakaamipikai1
கிளிநொச்சியில்  தொடா்ச்சியாக கடந்த மூன்று  தினங்கள்  பெய்து வரும் மழையினால்  கனகாம்பிகைக் குளத்தின் நீர்மட்டம்  பத்தடி  ஒன்பதன்குலமாக அதிகரித்தமையினால்   கனகாம்பிகைக்குளம்  வான் பாய்வதாக  அங்கிருக்கும்  எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்
 kanakaamipikai9
அத்துடன் பாய்கின்ற வெள்ள நீரானது  இரணைமடு சந்தியில்  இருந்து இரணைமடுக் குளத்திற்கான  பிரதான பிரதான  வீதியில்  இபாட் திட்டத்தின் கீழ்   அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்ற   பாலத்தின் ஊடாக  பாய்கின்றது
 kanakaamipikai8

 குறித்த பாலத்தின் வேலைகள் முடிவடையாத நிலையில் இருப்பதனால் குறித்த பாலத்திற்கு அருகாமையில் சிறிய பதில் பாதை போட்டப்பட்டு போக்குவரத்து நடைபெறுகின்றது  பாய்ந்து வருகின்ற  வெள்ளநீர் குறித்த  பாதையினை ஊடறுத்துப் பாய்வதனால் குறித்த  பதில் பாதை சிறிது சிறிதாக   நீருடன் அடித்துச்  செல்லப்பட்டுக்கொண்டுள்ளது இவ் மழை  இவ்வாறே தொடருமானால்  குறித்த பாதையின் போக்குவரத்து தடைப்படும் அபாயம் இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்

kanakaamipikai2   kanakaamipikai7 kanakaamipikai6 kanakaamipikai5 kanakaamipikai4 kanakaamipikai3

Facebook Comments