யா திருமணம் செய்து கொண்டு ஆஸ்திரேலியாவுக்கு செல்வதால் கல்யாணம் முதல் காதல் வரை டிவி தொடரில் இருந்து விலகியுள்ளாராம். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கல்யாணம் முதல் காதல் வரை நெடுந்தொடரில் அமித் பார்கவ், ப்ரியா இடையேயான கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்நிலையில் ப்ரியா திடீர் என அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகிவிட்டார்.

ப்ரியா

ப்ரியா இல்லாமல் கல்யாணம் முதல் காதல் வரை நெடுந்தொடரை பார்க்க முடியவில்லை என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் புலம்பித் தள்ளி வருகிறார்கள்.
priya
திருமணம்

ப்ரியா தான் காதலித்து வரும் ராஜவேலை திருமணம் செய்யத் தான் நெடுந்தொடரில் இருந்து விலகியதாக செய்திகள் வெளியாகின. திருமணம் நடந்தால் என்ன எத்தனையோ நடிகைகள் திருமணத்திற்கு பிறகு டிவி தொடர்களில் நடிக்கவில்லையா என்கிறார்கள் ரசிகர்கள்.
priya01
சினிமா

வழக்கமாக சினிமா படங்களில் நடிக்கும் நடிகைகள் தான் திருமணத்திற்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடுவார்கள். நீங்கள் தொடர்ந்து நடிங்க ப்ரியா என்று ரசிகர்கள் அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.
priya02
ஆஸ்திரேலியா

ப்ரியா திருமணம் செய்யப் போகும் ராஜவேல் ஆஸ்திரேலியாவில் வேலை பார்க்கிறார். அதனால் ப்ரியா திருமணத்திற்கு பிறகு ஆஸ்திரேலியாவில் செட்டில் ஆகிறார். அந்த காரணத்திற்காக தான் அவர் கல்யாணம் முதல் காதல் வரை நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளாராம்.

Facebook Comments