வயல் நிலம் ஒன்றின் புதருக்குள் இருந்து 5 கிலோ கிராம் எடை கொண்ட அதிசக்தி வாய்ந்த கிளைமோர் குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனை தற்போதைய ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவினை கடந்த அரசாங்கத்தின் போது கொலை செய்ய பயன்ப்படுத்த திட்டமிடப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.kelimor

இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது….

மன்னம்பிட்டி கெகலு கொலனிய புராண விகாரைக்கு அருகில் உள்ள வயல் காணியில் இந்த குண்டு காணப்பட்டது. பொலன்நறுவை விசேட பொலிஸ் பணியகத்தின் அதிகாரிகள் இந்த குண்டை மீட்டுள்ளனர்.

போர் நடைபெற்ற காலத்தில் விடுதலைப் புலிகள் இந்த கிளைமோர் குண்டை மறைத்து வைத்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

போர் நடைபெற்ற காலத்தில் மகாவலி அபிவிருத்தி அமைச்சராக இருந்த தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்யும் திட்டமிட்ட கரும்புலி உறுப்பினர் ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

அவர் அதி சக்தி வாய்ந்த இரண்டு கிளைமோர் குண்டுகளை கொண்டு வந்திருந்ததாக கூறப்படுகிறது. அந்த இரண்டு குண்டுகளில் ஒன்றை புலனாய்வு தகவல்களின் அதிகாரிகள் மீட்டனர்.

மற்றைய கிளைமோர் குண்டு மறைத்து வைக்கப்பட்டிருந்த இடத்தை உயிரிழந்த புலிகளின் உறுப்பினர் மாத்திரமே அறிந்து இருந்ததாக பொலிஸார் கூறினார்.

மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments