அவிசாவளை – மஹதொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் கணவனும், மனைவியும் உயிரிழந்துள்ளனர்.

இன்று அதிகாலை 4.00 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பாரவூர்தியொன்றும், முச்சக்கர வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்துள்ளவர்கள், அவிசாவளை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதான நபரும் 28 வயதான பெண்ணும் என தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Facebook Comments