கிளிநொச்சியில் பெய்து வரும் கடும் மழையால்  பல பகுதிகளில் வெள்ளம்
கிளிநொச்சி பெய்து வரும் கடும் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அதேவேளை பெரும் பாலான வீதிகள் வாய்க்கால் போன்று காணப்படுகிறது. இதனால் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்து வருகின்றனா்.dsc01309
குறிப்பாக பரீட்சைக்கு செல்லும்  மாணவா்கள் பெரும் சிரமங்களுக்கு மத்தியில் சீருடைகள் நணைந்த நிலையில் செல்கின்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளது.dsc01314
தொடர்ச்சியாக கடந்த நான்கு  தினங்கள்  பெய்து வரும் மழையினால் சிறுகுளங்கள் வான்பாய்வதால் தாழ் நிலப்பகுதிகள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. வீதிகளில் வெள்ளம் குறுக்கறுத்து பாய்வதால் முருகண்டி, இந்துபுரம், ஆனந்தநகர் மேற்கு, உருத்திரபுரம், அக்கராயன், மற்றும் தட்டுவன்கொட்டி ஆகிய  கிராமங்களின் பாதைகள் போக்குவரத்துச் செய்ய முடியாத  நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.dsc01323
போக்குவரத்து செய்ய முடியாத அளவில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள கா்ப்பிணித் தாய்மார்கள், முள்ளம்தண்டு வடம் பாதிக்கப்பட்டவா்கள், போன்றவா்களை கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளா் மருத்துவா் காா்த்திகேயனின் உதவியுடன் கிளிநொச்சி வைத்தியசாலை பணியாளா்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்துள்ளனா். அத்துடன் நேற்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல்   மருத்துவா் காா்த்திகேயனின் உருத்திரபுரம், சிவன்சோலை கிராமங்களில் வீதி போக்குவரத்து துண்டிக்கப்பட்ட இடங்களில் நின்று அவசர கால உடனடி ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றாா்dsc01325
குறிப்பாக கிளிநொச்சியில் உருத்திரபுரம், பொன்னகர், இரத்தினபுரம், பரந்தன் சிவபுரம், பண்ணங்கண்டி, மலையாளபுரம் இந்துபுரம், ஆனந்தபுரம் மேற்கு என பல பிரதேசங்கள் வெள்ளத்தினால் மூழ்கியுள்ளது. பல வீதிகளில் வெள்ளம் ஊடறுத்து பாய்கிறது. இதனால் சில வீதிகளில் முற்றாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.dsc01331
மேலும் இதுவரை வெள்ளத்தினால் இடம்பெயரும் நிலைமை மக்களுக்கு ஏற்படவில்லை. இருந்தும் தற்போது பெய்கின்ற மழை தொடர்ந்தும் பெய்துவருமானால் வெள்ளப்பாதிப்பு மேலும்  அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.    dsc01328  dsc01332 dsc01333 dsc01334 dsc01339 dsc01340 dsc01344 dsc01346
Facebook Comments