யாழ் பருத்திதுறை பொலிஸ் நிலையத்தில் புலிகளின் புரட்சிப் பாடல் ஒலித்த விடையம்…. இந்தச்சம்பவம் பற்றி மேலும் தெரிய வருவதாவது,பருத்தித்துறை இன்பசிட்டி பகுதியில் கடல் தொழிலுக்கு செல்லும் இளைஞர்கள் சிலர் தொழில் முடித்து மாலை 6.00 மணியிலிருந்து இரவு 8.00 மணிவரை இன்பசிட்டி மீனவர் சங்க கட்டடத்தில் தொழில் மற்றும் பலதரப்பட்ட பிரச்சினைகள் தொடர்பில் கூடிப்பேசி பொழுதுபோக்குவது வழமையானது.

இன் நிலையில் திங்கள் இரவு பொலிசார் அந்த கட்டடத்தில் கூடியிருந்த இளைஞர்கள் எட்டு பேரை ஜீப்பில் தூக்கி போட்டுக்கொண்டு வந்து பொலிஸ் நிலையத்தில் அடைத்துள்ளனர்.

இதற்கு என்ன காரணம் என்று கேட்டு , இளைஞர்கள் களைத்துப் போய் விட்டார்கள். ஆனால் அங்கே நின்ற சிங்களப் பொலிசாருக்கோ இவர்கள் என்ன சொல்கிறார்கள் என்று புரியவில்லை.

21ம் திகதி முதல் மாவீரர் வாரம் அனுஷ்டிக்கப்படும் என்று மட்டும் தான் அவர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் பார்வைக்கு இந்த தமிழ் இளைஞர்கள் கூடி இருந்து மாவீரர் வாரத்தை அனுஷ்டிப்பதாக நினைத்துவிட்டார்கள். இதனால் கடுப்படைந்த இளைஞர்கள்.

உதுக்காக உங்களையும் நாங்கள் இன்றிரவு நிம்மதியா நித்திரை கொள்ள விடப்போறதில்லை’ என்று பொலிஸாரைப் பார்த்துக் கூறிவிட்டு, அங்கிருந்த சாப்பாட்டு கோப்பைகள், தேநீர் தம்ளர்கள், இரும்புக் கம்பிகளில் தாளம் தட்டி விடிய விடிய தமிழீழ விடுதலைப்புலிகளின் புரட்சிப் பாடல்களை சத்தமாகப் பாடி பாட்டுக்கச்சேரி நடத்தி பொலிஸ் நிலையத்தை அதகளப்படுத்தியுள்ளனர்.

அருகில் இருந்த வீடுகளுக்கே கேட்க்கும் அளவு இவர்கள் பாடல் சத்தம் இருந்துள்ளது என்றால் பாருங்களேன்.

Facebook Comments