ஊட­கங்­களை ஒழுங்கு விதி­க­ளுக்கு உட்­ப­டுத்தும் வகையில்   சுயா­தீன ஊடக ஆணைக்­கு­ழு­வொன்றை நிறு­வு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.  இது தொடர்பில்   நான் முன்­வைத்த அமைச்­ச­ர­வைப்­பத்­தி­ரத்­திற்கு  அங்­கீ­காரம்  கிடைத்­துள்­ளது. அந்த வகையில் இந்த சுயா­தீன ஆணைக்­கு­ழுவை நிறு­வு­வ­தற்கு அனைத்துத் தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பை வழங்­க­வேண்­டு­மென ஊட­கத்­துறை அமைச்­சரும், அமைச்­ச­ரவைப் பேச்­சா­ள­ரு­மான   கயந்த கரு­ணா­தி­லக தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்றக் கட்­டடத் தொகு­தியில் நேற்று நடை­பெற்ற வாராந்த அமைச்­ச­ரவை முடி­வு­களை  அறி­விக்கும் செய்­தி­யாளர் மாநாட்டில்  கலந்­து­கொண்டு  கருத்து வெளி­யி­டு­கை­யி­லேயே   அமைச்­ச­ரவைப் பேச்­சாளர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்

கடந்த நவம்பர் மாதம் 18 ஆம்­தி­கதி முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தனது 71 ஆவது பிறந்த தினத்தை கொண்­டா­டினார். மறு­தினம் 19 ஆம்­ தி­க­தி­யா­னது    அவர்  ஜன­வரி  மாதம் 8 ஆம்­ தி­கதி தேர்­தலை நடத்­தி­யி­ருக்­கா­விடின்  அவ­ரு­டைய இரண்­டா­வது பத­விக்­காலம் முடி­வ­டையும் தின­மாக அமைந்­தி­ருக்கும்.   அன்­றைய தினமே  வர­வு­ – செ­ல­வுத்­திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு மூன்றில் இரண்டு பெரும்­பான்­மை­யுடன் நிறை­வேற்­றப்­பட்­டது.

தற்­போது நாட்டில்  ஊட­கத்­துறை நசுக்­கப்­ப­டு­வ­தாக அன்­றைய தினம்   மஹிந்த ராஜ­பக் ஷ  கூறி­யி­ருந்தார்.  அவர் என்ன  அர்த்­தத்தில் இவ்­வாறு கூறினார் எனத் தெரி­ய­வில்லை. 2006 முதல் 2016 ஆம் ஆண்­டு­வரை 13  ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ளனர். ஊட­க­வி­­ய­லாளர்கள் மீதான  87 தாக்­குதல் சம்­ப­வங்கள்   பதி­வா­கி­யுள்­ளன. 20 கைதுகள் இடம்­பெற்­றுள்­ளன.

பல ஊட­க­வி­யலாளர்கள் நாட்டை விட்டு  வெளி­யே­றினர்.   வெள்­ளைவேன் கடத்தல்கள்  இடம்­பெற்­றன. ஆனால் ஜன­வரி 8 ஆம்­ தி­க­திக்குப் பின்னர்  நிலைமை மாறி­யது.  ஊட­க­வி­ய­லா­ளர்கள் தொடர்பில்  ஏதா­வது கேள்வி எழுப்­பு­வது  தவ­றா­கி­வி­டாது.  ஊடகச் சுதந்­தி­ரத்தைப் பலப்­ப­டுத்­தவே எமது அர­சாங்கம் விரும்­பு­கி­றது. அந்­த­வ­கை­யி­லேயே   நாங்கள்  இவ்­வாறு  ஊடக  ஒழுங்குவிதி­களை   முறை­மைப்­ப­டுத்தும் வகையில்  சுயா­தீன ஊடக ஆணைக்­கு­ழு­வொன்றை நிறு­வு­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளோம்.  நாங்கள் எத­னையும்  மக்கள் மத்தியில் திணிக்­க­மாட்டோம். மக்­களின் யோச­னை­க­ளையும்,  ஒத்­து­ழைப்­பையும் பெற்றே எந்­த­வொரு விட­யத்­தையும் முன்­னெ­டுப்போம்.

கேள்வி: ஆனால் ஜனா­தி­ப­தியும் பிர­த­மரும்   ஊட­கங்­களை  கடு­மை­யாக விமர்­சிக்­கின்­ற­னரே?

பதில்:- விமர்­சிப்­பது அடக்­கு­மு­றை­யா­கி­வி­டுமா?

கேள்வி:-  இணை­ய­த்தளம் ஒன்றின்   ஆசி­ரியர்  வெளி­நாட்டில் இருப்­ப­தா­கவும், அவரை  கைது­செய்ய சர்­வ­தேச பொலி­ஸாரின் உதவி  நாடப்­படும் எனவும்  நீதி அமைச்சர் தெரி­வித்­துள்ளார்.  எந்த அடிப்­ப­டையில் இவ்­வாறு  சர்­வ­தேச பொலி­ஸாரை நாடி­யுள்­ளீர்கள்?

பதில்: (பிர­தி­ய­மைச்சர்  பரணவிதா­ரண)  இல்லை  குறித்த     இணை­ய­மா­னது  பொறுப்­பற்ற வகையில்   செய்­தி­களை வெளி­யி­டு­கின்­றது.  தனிப்­பட்ட விட­யங்­க­ளையும் வெளி­யி­டு­கின்­றது.

குறிப்­பாக  தீர்ப்­புக்கள் வரும் முன்னர்  நீதி­ப­திகள்  விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றனர். எனவே இது தொடர்பில் ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யுள்­ளது.  நீதித்­து­றையில் உள்ள குறை

களை கொண்டுவரலாம். ஆனால்   நீதிபதிகளை  அவமதிக்கக்கூடாது.  நீதிமன்றத்தை அவமதிக்கக் கூடாது. இது தொடர்பில் நீதிபதிகள்  நீதியமைச்சருடன் பேச்சு நடத்தியிருந்தனர்.  எவ்வாறெனினும் குறித்த இணை

யத்தளத்தின் ஆசிரியர் எந்தநாட்டில்? என்ன அடிப்ப

டையில்  இருக்கின்றார் என்பதை  பார்க்கவேண்டும்.  அதன் பின்னரே  அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கலாம்.

Facebook Comments