ளைஞர் ஒருவர், உறங்­கிக்­கொண்­டி­ருந்த தனது காத­லியின் உடலில் உயி­ருள்ள இரு பெரிய பாம்­புகள் எறிந்து அந்த யுவ­திக்குப் பெரும் பீதியை ஏற்­ப­டுத்­தி­யுள்ளார்.snakes01

டெரெக் டெஸோ எனும் இந்த இளைஞர், வேடிக்­கை­களில் ஈடு­பட்டு அதை வீடி­யோவில் பதி­வு­செய்து வெளி­யி­டு­பவர். அண்­மையில் அவர் தனது காத­லியை வியப்­புக்­குள்­ளாக்­கு­வ­தற்­காக அவரின் மீது பாம்­பு­களை எறியும் விப­ரீதத்தை மேற்­கொண்டார்.

இதன்­போது பதி­வு­செய்­யப்­பட்ட காட்­சிகள் இணை­யத்­திலும் வெளி­யி­டப்­பட்­டுள்­ளன. தனது நண்­பர்கள் சில­ருடன் இணைந்து, இந்த விப­ரீத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்டார்.
snakes02
தனது காதலி உறங்கிக் கொண்­டி­ருந்­த­போது தனது நண்பி, நண்­பர்கள் சகிதம் அறைக்குள் புகுந்த டெரெக் டெஸோ, பெட்­டி­யொன்றில் அடைக்­கப்­பட்­டி­ருந்த இரு பாம்­பு­களை காத­லியின் உடலில் கொட்­டினார்.
snakes03
பின்னர், காத­லி­யிடம் அன்­பாக பேசி அவரை உறக்­கத்­தி­லி­ருந்து எழுப்­பிய டெரெக், அவரின் உடலில் பாம்­புகள் ஊர்ந்து கொண்­டி­ருக்கும் விட­யத்தை தெரி­வித்­த­போது, அந்த யுவதி அச்­சத்­தினால் வீறிட்டு அழுதார்.

ஆனால், டெரெக்கும் அவரின் நண்­பர்­களும் சிரித்துக் கொண்­டி­ருக்கும் காட்சி அவ்­வீ­டி­யோவில் பதி­வா­கி­யுள்­ளது. பின்னர் பாம்­பு­களைக் கையாளும் நபர் ஒருவர் மேற்­படி பாம்­பு­களை அப்­பு­றப்­ப­டுத்­தினார்.
snakes
அதன்பின்­னரும் அழுது குழ­றிய மேற்­படி யுவதி, டெரெக்கை திட்­டினார். இந்த வீடி­யோவை இணை­யத்தில் சுமார் 8 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். உலகி லேயே மிக மோசமான காதலன் இவர் என டெரெக் டெஸோவை சிலர் விமர் சித்துள்ளனர்.

Facebook Comments