கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்ளைச் சிரமதானம் செய்யும் பணிகள் அப்பகுதி மக்களினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.dsc01389

இந்தச் சிரமதான பணிகள் இன்று காலை வட மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

dsc01391

கிளிநொச்சி மாவட்டத்தில் கனகபுரம், முழங்காவில்,   ஆகிய பகுதிகளில் மொத்தமாக  இரண்டு  மாவீரர் துயிலும் இல்லங்கள் காணப்படுகின்ற போதிலும்,  யுத்தத்தின்  பின்  இரண்டு துயிலும் இல்லங்களும்  இராணுவத்தினரால்  முற்றாக அழிக்கப்பட்டு அவர்கள் வசம் இருந்தது எனினும் இப்பொழுது குறித்த பகுதிகளில் இருந்த இராணுவ  முகாம் அகற்றப்பட்டுள்ள நிலையில் கனகபுரம், துயிலுமில்லத்தில்  மக்களினால் சிரமதானம் செய்யப்படுவதாக அங்கிருக்கும்  எமது செய்தியாளர் தெரிவித்தார்.

dsc01394

 

போரின்போது கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை நினைவுகூறுவதற்கு எவராவது முற்பட்டால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன  கடந்த வாரம் அறிவித்திருந்தார். dsc01396

எவ்வாறாயினும், யுத்ததின் போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கு அனைவருக்கும் உரிமையுள்ளதாகத் தெரிவித்துள்ள வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம்,எதிர்வரும் 27 ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய முன்றலில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெறும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.    dsc01399 dsc01404 dsc01407 dsc01412 dsc01413 dsc01421 dsc01387

Facebook Comments