பெண்கள்,மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்படவேண்டும்-முல்லை அரச அதிபர்!
பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு  எதிரான வன்முறைகள்  குறைவடைய வேண்டும் என்றால் வன்முறைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கான தண்டனைகள் அதிகரிக்கப்படவேண்டுமென  முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.
dsc_0299
‘பால்நிலை வன்முறைகளுக்கு எதிரான பணத்தையும் பலத்தையும் சேகரிப்போம்’ என்னும் தொனிப்பொருளில் உலக பால்நிலை வன்முறைக்களுக்கு எதிரான வாரமான நவம்பர் 25 தொடக்கம் டிசம்பர் 10வரையான ‘வெண்பட்டி தின’ வாரத்தின் தொடக்க நிகழ்வும் பேரணியும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தால்  இன்று நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முல்லைத்தீவு அரச அதிபர் திருமதி.ரூபாவாதி கேதீஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.
 dsc_0295
Facebook Comments