முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் ஒன்று  நேற்று இரவு  இனம் தெரியாத நபர்களால்  திணைக்கள வளாகத்தில் வைத்து தீவைத்து எரிக்கப்பட்டுள்ளது.
dsc_0303
 
சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
 
முல்லைத்தீவு கடற்கரை வீதியில் உள்ள கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தில் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவரின் மூன்று லட்ஷம் பெறுமதியிலான மோட்டார்  சைக்கிளை அலுவலக வளாகத்தில் நிறுத்திவிட்டு விடுதியில் தூக்கத்தில் இருந்த வேளையில் நள்ளிரவில் வந்த இனம்தெரியாத நபர்கள் காவோலைகளை  மோட்டார் சைக்கிளின் மேல் போட்டு தீவைத்துவிட்டு  தப்பி சென்றுள்ளனர்.
dsc_0290
 
சம்பவம் தொடர்பில் திணைக்கள அதிகாரிகளால் முல்லைத்தீவு விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறையிட்டதினை  தொடர்ந்து விசேட குற்றத்தடுப்பு பொலீசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
dsc_0300
அண்மைக்காலமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள கொக்கிளாய்,நாயாறு போன்ற பிரதேசங்களில் உள்ள களப்புக்களில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களையும் அவர்களின் மீன்பிடி உபகரணங்களோடு கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் முல்லை மாவட்ட நீரியல்வள திணைக்களத்தின்  அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments