கிளிநொச்சி கனகபுரம், முழங்காவில் பிரதேச மக்கள் இரண்டாவது நாளாகவும் மாவீரர் துயிலும் இல்லங்களை தூய்மையாக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.dsc01396

தமது உறவுகளின் கடமைகளை நிறைவேற்றுவதற்காக நேற்று(25) மக்கள் ஒன்று திரண்டு இந்த பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.dsc01400

இதன் தொடர்ச்சியாக இன்று(26) காலை கனகபுரம் மற்றும் முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லங்களுக்கு வருகை தந்த மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், மக்கள் தமிழ்த் தேசிய உணர்வாளர்கள் சுத்தப்படுத்தும் பணியை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.mukankaavil-p-3

இதேவேளை நாளை மாலை 06.05 மணியளவில் விளக்கேற்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வணக்க நிகழ்வுகள் மாவீரர் துயிலும் இல்லங்களில் நடைபெற்றவுள்ளது.mukankaavil-p-5

மேலும் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் அனைவரும் வருகைத்தந்து இனவிடுதலைக்காக போராடி, தமது உயிர்களை தியாக செய்யத உறவுகளை வணங்கி அஞ்சலி செலுத்துமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி கிளை வேண்டிக்கொள்கின்றது என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

     unnamed-1 unnamed-2
Facebook Comments