ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலம் துண்டிக்கப்படும் அபாயம் படகு போக்குவரத்திற்கு அனா்த்த முகாமைத்துவ பிாிவு ஏற்பாடு

தற்போது நிலவி வரும் சீரற்ற கால நிலை காரணமாக ஊற்றுப்புலம் ஒடுக்கு பாலத்தின் ஊடாக போக்குவரத்து துண்டிக்கபடும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
img_9286 img_9288 img_9302 img_9274 img_9277
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிாிவில் ஊற்றுப்புலம் கிராமத்தில் அமைந்துள்ள ஒடுக்கு பாலத்திற்கு  பதிலாக நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் தற்போதுஇவ்வருட நடுப்பகுதியிலிருந்து   மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதன்போது அங்கு காணப்பட்ட ஒடுக்கு பாலம் அகற்றப்பட்டு நிரந்தர பாலம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்து. இதேவேளை மக்களின் தடையற்ற போக்குவரத்திற்கு  மாற்று ஏற்பாடாக தற்காலிகமாக ஒடுக்கு பாலம் அமைக்கப்பட்டிருந்தது. அதற்கான மண் அணைகள் அமைக்கப்பட்டு போக்குவரத்து இலகுவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்  தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலை காரணமாக பாலமும், மண் அணையும் உடைக்கப்படும் அபாய நிலையில் இருக்கிறது.
குறித்த பாலம் உடைக்கப்படும் பட்சத்தில் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களின்  கிளிநொச்சி ஏனைய பிரதேசங்களுடனான  தொடா்புகள் துண்டிக்கப்பட்டு தனித் தீவுக்குள் இருப்பது போன்ற நிலை ஏற்பட்டு விடும் எனவேதான் இந்த நிலைமைகளை தவிர்க்கும் வகையில் அனா்த்த முகாமைத்துவ பிாிவினா், கிளிநொச்சி பிராந்திய  சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளா் மருத்துவா் காா்த்திகேயன்  ஆகியோா் நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு படகு போக்குவரத்தை மேற்கொள்வதற்கு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளதோடு, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினா் முருகேசு சந்திரகுமாரும் பிரதேச மக்கள் அமைப்புகளுடன் சென்று நிலைமைகளை ஆராய்ந்துள்ளனா்.
Facebook Comments