“நாடா” புயல்காற்று   எனக் கூறப்படும்  புயல் காற்று ஒன்று இன்று வடக்கை அச்சுறுத்திக் கொண்டுள்ள நிலையில் இன்று காலை கிளிநொச்சியில் பலமாக வீசிய காற்றினால்   காலை எட்டு முப்பது மணியளவில்  கிளிநொச்சி முரசுமோட்டை  முருகானந்தா கல்லூரியில் உள்ள தற்காலிக வகுப்பறை தொகுதி ஒன்று முற்றாக பாறி  வீழ்ந்துள்ளது.
15281950_10211094918954669_1690782144_n 69cffb15c099b50b700f6a70670094f41-e1426351526496 15327462_387580008254887_5543100136936246588_n 15253658_387580024921552_8465749458698897075_n
இந்த சம்பவம் நடந்தவேளை பாடசாலையில் மாணவர்கள் இருந்த போதிலும் எவருக்கும்  எந்தவித பாதிப்புக்களும்  ஏற்படவில்லை.என  அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்
தரம் ஆறுதொடக்கம்  உயர்தரம் கலை வர்த்தகம்  கணிதம் விஞ்ஞானம்  ஆகிய  பிரிவுகளைக்  கொண்டு இயங்கி வருகின்ற இப்பாடசாலையில் கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்ப்பட்ட  பிரதேச மாணவர்களை அதிகமாகக் கல்விகற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Facebook Comments