கிளிநொச்சி பச்சிளைபள்ளி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட இந்திராபுரம் மற்றும் முகமாலை பிரதேசங்களில் கண்ணிவெடி அகழ்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ள நிலையில், அப்பகுதிகளை உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று (02.12.2016) இடம்பெற்றது.mukamaalai-6
கடந்த 2000ஆம் ஆண்டு மற்றும் அதற்கு முன்னர் குறித்த பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களின் காணிகளே இன்றைய தினம் அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினால் கையளிக்கப்பட்டுள்ளன.mukamaalai-1
இந்திராபுரம், முகமாலையில் பிரதேச மக்களின் கானிகள் சுமார்  69 குடும்பங்களுக்கான ஆயிரத்து 884 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது.mukamaalai-7
இன்றைய தினம் விடுவிக்கப்படும் காணிகள், காணி உரிமையாளர்களால் அடையாளம் காணப்பட்டு, அப்பகுதிகளில் விரைவில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்று கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயம் தெரிவித்துள்ளார்.
 mukamaalai-5
Facebook Comments