இலங்கையில் அதிவிரைவாக வளர்ச்சிகண்டுவருகின்ற ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, நாட்டில் ஸ்மார்ட்போன் வர்த்தகநாமத்தின் விஸ்தரிப்புத் திட்டம் தொடர்பில் மற்றுமொரு சாதனை இலக்கைக் குறிக்கும் வகையில் கொழும்பு 4 இல் தனது முதலாவது சேவை மையத்தைத் திறந்து வைத்துள்ளது.

Huawei முதன்முதலாக அறிமுகப்படுத்தியுள்ள சேவை மையமாக இது மாறியுள்ளதுடன் Huawei வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்குப் பின்னரான ஒட்டுமொத்த சேவைகளையும் வழங்குவதில் இது கவனம் செலுத்தும்.

இப்புதிய சேவை மையமானது 9/1/2, புகையிரத நிலைய வீதி, கொழும்பு 04 என்ற முகவரியில் அமைந்துள்ளது.

Huawei Device உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு பொது முகாமையாளரான கல்ப பெரேரா, சிங்கர் ஸ்ரீலங்கா பீஎல்சி நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளரான குமார் சமரசிங்க, விற்பனை மற்றும் வர்த்தகத்துறைப் பணிப்பாளரான மகேஷ் விஜேவர்த்தன மற்றும் தொழிற்பாடுகளுக்கான பணிப்பாளரான சந்தன சமரசிங்க ஆகியோர் இந்த சேவை மையத்தின் திறப்பு விழா நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

ஸ்மார்ட்போன் மற்றும் tablet சாதனங்களின் திருத்த வேலைகள், பேணல் மற்றும் உத்தரவாத சேவைகள் போன்ற சேவைகளை Huawei சேவை மையம் வழங்கவுள்ளது. Huawei தலைமையலுவலகத்தின் நேரடி வழிகாட்டலின் கீழ் விரிவான பயிற்சியைப் பெற்று, உரிய தகுதியையும், தகைமையையும் கொண்ட பணியாளர்கள் மூலமாக மிகச் சிறந்த சேவைகளையும் ஆலோசனைகளையும் வாடிக்கையாளர்கள் இங்கே பெற்றுக்கொள்ள முடியும்.

Huawei வர்த்தகநாமம் சந்தையில் மேலும் விஸ்தரிப்படைந்து வருகின்ற நிலையில் வாடிக்கையாளர்களின் பல்வேறுபட்ட தேவைகளையும் பூர்த்திசெய்ய உதவும் வகையில் பேணற்சேவை உட்கட்டமைப்பை மேம்படுத்துவதே Huawei இன் நோக்கமாகும்.

சேவை வழங்கல் விஸ்தரிப்பு தொடர்பில் Huawei Device உள்நாட்டு தலைமை அதிகாரியான ஹென்றி லியு கருத்து வெளியிடுகையில்,

“தொடர்ச்சியாக வளர்ச்சிகண்டு வருகின்ற ஒரு நாடான இலங்கையை, பிராந்தியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு சந்தையாக Huawei இனங்கண்டுள்ளதுடன் தற்போது வாடிக்கையாளர்கள் பிரத்தியேக அர்ப்பணிப்புடனான சேவை மையத்தினூடாக இலகுவாக தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும். அங்கே தமது ஸ்மார்ட்போனை பேணற் சேவை செய்வதன் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு சௌகரியத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்துவது மட்டுமன்றி, அனுபவமும், பயிற்சியும் பெற்ற பணியாளர்களின் மூலமாக தமது சந்தேகங்கள் மற்றும் கேள்விகளுக்கும் விடை காண முடியும்” என்று குறிப்பிட்டார்.

Huawei இலங்கையில் தீவிரமான விஸ்தரிப்புத் திட்டத்தை முன்னெடுத்துவரும் நிலையில் இந்த சேவை மையத்தை திறந்து வைத்துள்ளமை வாடிக்கையாளர்களுக்கு அதி நவீன வசதிகளை வழங்குவதை உறுதி செய்யும். பிரத்தியேகமான அணியின் கவனிப்புடன் சௌகரியமான அமைவிடத்திலுள்ள இந்த சேவை மையத்தில் சௌகரியமான சேவையைப் பெற்று வாடிக்கையாளர்கள் மகத்தான அளவில் பயனடைவர். Huawei தற்போது இலங்கையில் ஸ்மார்ட்போன் சந்தைப்பிரிவில் இரண்டாவது ஸ்தானத்தில் திகழ்ந்து வருகின்றது. இலங்கையில் மிகவும் விசுவாசம்மிக்க வர்த்தகநாமமான சிங்கர் ஸ்ரீலங்கா, அதன் பிரத்தியேக தேசிய விநியோக பங்காளராகச் செயற்பட்டு வருகின்றது. சிங்கர் மெகா, சிங்கர் பிளஸ் மற்றும் சிசில் வேர்ல்ட் காட்சியறைகள் அடங்கலாக 400 இற்கும் மேற்பட்ட சிங்கர் விற்பனைக் காட்சியறைகள் மற்றும் நாடெங்கிலும் 1,500 முகவர் விற்பனை நிலையங்களைத் தொழிற்படுத்தும் சிங்கரின் டிஜிட்டல் ஊடக மார்க்கம் ஆகியவற்றுடன் நாட்டின் அதி விசாலமான விற்பனை வலையமைப்பின் மூலமாக Huawei ஸ்மார்ட்போன்களை அனைவரும் பெற்றுக்கொள்ள முடியும்.

பெறுமானத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற, மற்றும் புத்தாக்கமான உற்பத்திகள் மற்றும் சேவைகளை Huawei தொடர்ச்சியாக வழங்கிவருகின்றது. Brand Finance இன் பிரகாரம் , 2016 ஆண்டில் உலகின் மிகச் சிறந்த 100 பெறுமதிமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலில் 47 ஆம் இடத்தில் Huawei உள்ளது. Interbrand இன் மிகச் சிறந்த சர்வதேச வர்த்தகநாமங்கள் பட்டியலில் Huawei அண்மையில் 72 ஆவது ஸ்தானத்திற்கு திடீர் முன்னேற்றம் கண்டுள்ளது.

Facebook Comments