இந்த வருடம் மக்கள் மத்­தியில் அதிக பிபல்­ய­மாக அதிகம் பகி­ரப்­பட்ட தேவை­யில்­லாத விட­யங்கள் பற்றி இங்கு காணலாம்.

பொகோமன்- கோ வீட்­டுக்­குள்­ளேயே ஸ்மார்ட் போன் செய­லி­களில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த இளை­ஞர்­களை தெருத் தெரு­வாக அலை­ய­விட்ட விளை­யாட்டு. எந்த வீட்டில் அம்மா காய்­கறி வாங்கி வர கூறினால் கூட நக­ராத ஆட்கள், இது­வரை சென்றுவராத ஏரி­யாக்­க­ளுக்கு கூட பொகோமன் பிடிக்க சென்­றனர். சிலர் வங்­கி­க­ளுக்குள் எல்லாம் பொகோமன் பிடிக்க சென்று காவ­லர்­களால் விரட்­டப்­பட்ட சம்­ப­வங்­களும் நடந்தன.

ஒரு விரல் சேலஞ் கண்­ணாடி முன் நிர்­வா­ண­மாக நின்றுக் கொள்ள வேண்டும். ஒரு விரல் கொண்டு தங்கள் மேல் உடல் மற்றும் கீழ் உடல் மறைத்­தப்­படி செலஃபீ எடுத்து அதை பகிரவேண்டும். இதற்கு பெயர் 1-Finger Challenge.”

யூடியூப் விமர்­ச­கர்கள்! ஒரு படத்தை பார்த்து அதை பற்­றிய கருத்து சொல்­வது என்­பது வேறு. அதை பற்றி ஆழ­மாக விமர்­சனம் செய்­வது வேறு. அது என்ன படம், என்ன பிரிவில் எடுக்­கப்­பட்­டுள்­ளது என எதுவும் தெரி­யாமல் எல்­லா­வற்­றையும் குப்பைப் படம் என கூறும் கூட்­ட­மா­கவும்., ஒரு படத்­திற்கு ஐந்­திற்கு மூன்று மதிப்­பெண்­ணுக்கும் கீழ் அளிப்­பதால் தான் ஒரு சிறந்த விஞ்­ஞானி என்ற எண்ணம் கொண்­ட­வர்கள் பெரு­ம­ளவு யூடியூப் விமர்­ச­கர்கள் ஆன வருடம் 2016! டுவிட்டர் டிரென்ட்ஸ் முன்­பெல்லாம் டுவிட்­டரில் பெரும்­பா­லா­னோரால் அதிகம் பேசப்­படும் விஷயம் டிரென்ட் ஆனது. ஆனால், இந்த வருடம் ஒரு விஷ­யத்தை டிரென்ட் செய்ய வேண்டும் என்­ப­தற்­கா­கவே ஹேஷ்டாக் பயன்­ப­டுத்­தினர்.

பிர­ப­லங்­களை கலாய்ப்­பது! முன்­பெல்லாம் ஒரு பிர­ப­லத்தை பார்ப்­பதே கடினம். அவ­ருடன் பேசு­வ­தெல்லாம் அரி­திலும் அரிது. ஆனால், டுவிட்டர், ஃபேஸ்புக் வந்த பிறகு இது மிக எளி­மை­யா­கி­விட்­டது. இது அவ­ரது ரசி­கர்­க­ளுக்கு மட்­டு­மல்ல, பிடிக்­கா­த­வர்­க­ளுக்கும் கூட கைக்கு எட்டும் கனி­யா­கி­விட்ட நிலைமை ஏற்­பட்­டதால் பல பிர­ப­லங்கள் வேண்­டு­மென்றே கலாய்க்கப்பட்­டனர். சில பிர­ப­லங்கள் சொந்த டுவீட்­டிலே சூனியம் வைத்துக் கொண்­டனர்.

ஏதேனும் ஒரு ஏழை குழந்தை, அரசு பாட­சாலை மாணவர் புகைப்­ப­டத்தை எடுத்துக்கொண்டு. அத­னுடன் ஒரு பொய் செய்­தியை இணைந்து, “இதற்­கெல்லாம் நீங்க லைக் போடு­வீங்­களா? நடிகை படம்-னா லைக் போடு­வீங்க..” போன்ற பதிவுகள் ஆயிரக்கணக்கான ஷேர்கள் கடந்து ஹிட் ஆகின. ஆனால், அவற்றில் 99.99% பொய் பதிவுகள் தான். தங்கள் ஃபேஸ்புக் பக்கத்திற்கு லைக் கிடைக்க இதை செய்துள்னர்.

Facebook Comments