பெண் ஒரு­வ­ருடன் தனது கணவன் தொடர்பு வைத்­தி­ருந்­ததை அறிந்து ஆத்­தி­ர­முற்ற மனைவி கண­வனின் அந்­த­ரங்கப் பகு­தியில் கொதிக்கும் நீரை ஊற்றி காயத்தை ஏற்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் வெலி­கம பொலி­ஸாரால் கைது செய்­யப்­பட்­டுள்ளார்.

கைதான பெண்ணை பொலிஸார் மாத்­தறை நீதவான் நீதி­மன்­றத்தில் ஆஜர் செய்­த­போது நீதிவான் அப்­பெண்ணை இரண்டு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனு­ம­திக்­கு­மாறு உத்­த­ர­விட்டார்.

சந்­தேக நப­ரான பெண் வெலி­கம பிர­தே­சத்­தி­லுள்ள வித்­தி­யா­லயம் ஒன்றில் ஆசி­ரி­யை­யாக கட­மை­யாற்­று­கின்றார்.

தனது கணவர் வீட்­டுக்கு அரு­கி­லுள்ள பெண் ஒரு­வ­ருடன் தவ­றான தொடர்பு வைத்­தி­ருப்­பதை உறுதி செய்து கொண்டு பல­முறை இத்­தொ­டர்பை கைவி­டும்­படி எச்­ச­ரித்­த­தா­கவும் கணவர் எச்­ச­ரிக்­கையைப் பொருட்­ப­டுத்­தாமல் தொடர்ந்தும் அப்­பெண்­ணுடன் தொடர்பு வைத்­தி­ருந்­ததால் ஆத்திரமுற்று கணவனின் அந்தரங்கப் பகுதியில் மனைவி கொதி நீரை ஊற்றியதாகவும் கூறப்படுகிறது.

Facebook Comments