அதிஷ்ட லாபச் சீட்டு விலை அதிகரிப்பு: விற்பனை முகவர்கள் கடை அடைப்பு

அதிஷ்ட லாபச் சீட்டு விலை அதிகரிப்பு: விற்பனை முகவர்கள் கடை அடைப்பு

அதிஷ்ட லாபச் சீட்டு விலை அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தேசிய லொத்தர் சபை விற்பனை முகவர்கள் விற்பனைப் பகிஷ்கரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
அதிஷ்ட லாபச் சீட்டின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, 20 ரூபாவுக்கு விற்பனை செய்து வந்த சீட்டொன்றின் விலை 30 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிஷ்ட லாபச் சீட்டு விற்பனை செய்யும் முகவர்கள் சகலரும் தமது விற்பனை நிலையங்களை நேற்று (01) முதல் மூடி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாக அகில இலங்கை லொத்தர் விற்பனை முகவர்கள் சங்கத்தின் தலைவர் கிரிஷாந்த மாரபகே தெரிவித்துள்ளார்.
அதிஷ்ட லாபச் சீட்டின் விலை அதிகரிக்கப்பட்ட போதிலும், விற்பனை முகவர்களுக்கு வழங்கும் இலாபத் தொகை அதிகரிக்கப்படாதுள்ளதாகவும் அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

Facebook Comments