விபத்தில் இறந்த மாணவி மாவட்ட மட்டத்தில் முதலிடம் வவுனியாவில் சோகம்…

வவுனியா மாவட்டத்தில் கணிதப்பிரிவில் 3 ஏ சித்திகளை பெற்று  மாவட்ட மட்டத்தில் முதலாமிடத்தினை பெற்ற சிவதுர்க்கா சத்தியநாதன் என்ற மாணவி கடந்த வருடம் விபத்தில் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்களிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் குருநாகல் – அநுராதபுரம் பிரதான பாதையில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குறித்த மாணவி மற்றும் அவரது அம்மாவின் சகோதரியும் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் இன்று வெளியான உயர்தர பரீட்சை பெறுபேறுகளில் குறித்த மாணவி மாவட்ட மட்டத்தில் முதலிடத்தில் பெற்றுள்ளமை மகிழ்ச்சியளித்தாலும் அந்த மகிழ்ச்சியைக் கொண்டாட குறித்த மாணவி இல்லையென்பது அவர்கள் குடும்பத்தார் மத்தியில் சோகத்தை எற்படுத்தியுள்ளது.

குறித்த மாணவி வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியில் கல்வி கல்விகற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

Facebook Comments

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!