அம்பாறை, நிந்தவூர், அட்டப்பள்ளம் பிரதேசத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை வழி மறித்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.625-0-560-320-160-600-053-800-668-160-90-1

அட்டப்பள்ளத்தில் அமைந்துள்ள அனல் மின் நிலையத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரியே அவர்கள் இந்த வழி மறிப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.625-0-560-320-160-600-053-800-668-160-90-3

தமது குழந்தைகளுடன் நேற்று மாலை பெண்கள் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு வீதியின் நடுவே குழுமியிருந்து, ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.625-0-560-320-160-600-053-800-668-160-90-2

இந்த அனல் மின் நிலையத்தில் இருந்து வெளியேறுகின்ற புகை மற்றும் நச்சு வாயுக்களினால் சுவாச நோய், தோல் நோய் உள்ளிட்ட பல பாதிப்புகளுக்கு தாம் முகம் கொடுப்பதாகவும் கருவில் தரிக்கின்ற குழந்தை கூட கரைந்து செல்கின்ற துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டிருப்பதாகவும் சில பெண்கள் அமைச்சரிடம் இதன்போது முறையிட்டனர்.

Facebook Comments