நேற்றுமுன்தினம் கிளிநொச்சி  செல்வாநகர்  பகுதியில்  வைத்து  ஆயிரத்து  இருநூறு  கிராம்  கஞ்சாவுடன்  நீர்கொழும்பைச்  சேர்ந்த  முப்பது வயதான  சந்தேக நபர்  ஒருவர்  கிளிநொச்சிப் பொலிசாரால்  கைதுசெய்யப்பட்டிருந்தார்  img_0536
குறித்த சந்தேக  நபரை இன்று கிளிநொச்சிப் பொலிசாரால்  கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில்  ஆயர்ப்படுத்தி இருந்தனர்  இதன்போது  குறித்த சம்பவம் தொடர்பாக  மன்று சந்தேக நபரை  வினவிய பொழுது  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றிற்கு  முன்னாள்  அமைந்துள்ள  துர்க்கை  அம்மன் கோவிலில் தான் வேலை செய்வதாகவும்  தாம்  சில பிதிர்க் கடன்களை செய்வதற்கு  கஞ்சாவில் ரொட்டி சுட்டு  பட்பைப்பதாகவும் திறந்த மன்றில்   தெரிவித்துள்ளார்  img_0542
குறித்த சம்பவம் தொடர்பாக  குறித்த ஆலயத்தின்  பதிவு மற்றும்  ஆலயத்தை  சோதனையிட  மன்று வழங்கிய  உத்தரவுக்கு அமைய கிளிநொச்சிப்  பொலிசார்  மற்றும்  கரச்சி பிரதேச  செயலக உதவித்திட்டமிடல்  பணிப்பாளர்  அமல்ராஜ்  மற்றும் கலாச்சார  உத்தியோகத்தர் கிராம  அலுவலர் கின்சான்கொல்  அபிவிருத்தி  உத்தியோகத்தர்  ரெயிநோலட்  சோதனைனடவடிக்கையில்  ஈடுபட்டிருந்தனர்  இருப்பினும்  எவ்விதமான  சந்தேகத்திற்குரிய  பொருட்களும்  மீட்க்கப்படவில்லை img_0544
அத்துடன்  குறித்த ஆலயம்  பதிவற்ற  ஆலயம் என்பதுடன்   தனியார்  காணி  ஒன்றில்  அத்துமீறி  அமைக்கப்பட்டுள்ளதுடன்  ஒருபகுதி வீதிக்காக ஒதுக்கப்பட்ட நிலம் என்பது  குறிப்பிடத்தக்கது img_0545
Facebook Comments