க. பொ. த உயர் தர பரீட்சை முடிவுகள் வெளியாகி உள்ள நிலையில் மோசடி கும்பல்களுக்கு புதிய தீனி கிடைத்து உள்ளது.

பரீட்சையில் சித்தி அடைய அல்லது சிறந்த பெறுபேறு பெற தவறிய மாணவர்களை இக்கும்பல்கள் இலக்கு வைக்கின்றன.

எதிர்பார்த்த பெறுபேறுகளை அடைய தவறிய மாணவர்கள் விடைத் தாள்களின் மீள்திருத்தத்துக்கு விண்ணப்பிப்பது வழக்கம்.

மீள்திருத்தத்துக்கு விண்ணப்பியுங்கள், சிறந்த பெறுபேறு வர செய்து தர முடியும் என்று மாணவர்களின் பெற்றோருடன் குழைந்து பேசி பல இலட்சம் ரூபாயை கறந்து விடுகின்றனர்.

இவர்கள் அமைச்சர்களுடன் அல்லது அமைச்சு அலுவலகங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்கள் என்றும் நம்ப வைத்தே இதை செய்கின்றனர்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை எப்படியாவது சரியாக்க வேண்டும் என்கிற நப்பாசையில் பெற்றோரும் இவர்கள் கேட்கின்ற பணத்தை கொடுத்து விடுகின்றனர்.

Facebook Comments